அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்பவை உயிர் எழுத்துக்கள்! (நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமல் காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி). உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றின் பயன்பாட்டை மட்டும் உபயோகித்து ஏற்படுத்தப்படும் இவ்வொலிகளை "உயிர்
எழுத்துக்கள்" என்கின்றோம்.
க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பவை மெய் எழுத்துக்கள் (நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும் போது அல்லது மேலுதடும் கீழுதடும் முட்டும் போது ஏற்ப்படுத்தும் ஒலி). இவ்வொலிகளை ஏற்படுத்தப்படும் போது, காற்றின் பங்கைவிட உடலின் உறுப்புக்களின் பங்கே அதிகம் என்பதால், இவற்றுக்கு "மெய்யொலிகள்" அல்லது "மெய்யெழுத்துக்கள்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஃ ஆயுத எழுத்து (மேலன்னத்தில் ஓட்ட முற்ப்படும், ஆனால் தொண்டைக்குழியில் இருந்து வரும் காற்று அவை இரண்டுக்கும் இடையில் புகுந்து வெளிவரும் போது ஏற்ப்படும் ஒலி). இந்த எழுத்தை உச்சரிக்கும் போது இணையும் உடலுறுப்புக்களை காற்று ஒரு ஆயுதம் போல் பிரிக்க முற்ப்படுவதால், இதனை ஆயுத எழுத்து என்கிறார்கள்.
உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247
நம்மொழிக்கு "தமிழ்" என்று எப்படி பெயர் வந்தது என்பதை இக்கட்டுரை மூலம் கண்டறிவோமா?....
க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.
உலக மாந்தன் முதன் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் :
அ(படர்க்கை),
இ(தன்னிலை),
உ(முன்னிலை)
- என்பது பாவாணர் கருத்து. -
தமிழின் மெய் எழுத்துக்களில்...
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில் ஒன்றுமாக...
மூன்று மெய்யெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அவை "த்", "ம்", "ழ்" என்பவையாகும்.
இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி, அவற்றை முறையே கூட்டி...
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
சேர்த்து, "தமிழு" என்று ஆக்கி, பின்பு... கடையெழுத்திலுள்ள "உ"கரத்தைத் நீக்கி "தமிழ்" என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
செம்மொழியான என்மொழியே தமிழே அமுதே என் உயிரின் உருவே... உனை இன்னும் அறிய அருள்வாய் தமிழே..!
- நன்றி... தோழர் : முல்லைமண் சொந்தநிலம் -

No comments:
Post a Comment