(உண்மையில் இந்த பதிவை நான் எழுதியது 11-12-13 அன்று.. ஆனால் என் இணையத் தொடர்பில் இருந்த சில குளறுபடிகளால் இந்த பதிவை அன்றே பகிர முடியவில்லை.)
இது நான் வரி வடிக்க தொடங்கிய நான்காவது பதிவு... நான்கு என்பது என் வாழ்வில் கொஞ்சம் நெருக்கமான ஒரு இலக்கம். ஆனால் நான் அதைப்பற்றி எழுதுவதற்க்காக அமரவில்லை,
இங்கே நான் வடிக்க முயலும் வரிகள் இன்று இந்த உலகில் உயிரோடு இருக்கும் அதிகபட்ச்ச உயிர்கள் கொஞ்சம் விசித்திரமான, வித்தியாசமான முறையில் இறைவனாலோ அல்லது இயற்க்கையாலோ எதோ ஒருவிதத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட விசேஷமானவர்கள் என்று தான் சொல்ல வருகிறேன். இந்த ஆசீர்வாதமும் அதிஷ்டமும் விஷேடத்தன்மையும், 2003ம் ஆண்டு 02ம் மாதம் 02ம் திகதியோ அல்லது அதற்க்கு பின்போ பிறந்தவர்களுக்கும் சரி நேற்று அதாவது 10ம் திகதி 12ம் மாதம் 2013 அன்றும் சரி அதற்க்கு முன்பும் சரி இறந்து போனவர்களுக்கு கிடையாது. மொத்தத்தில் 01-02-2003 இலிருந்து 11-12-2013 வரை இந்த உலகில் உயோரோடு இருந்தோர் கண்ட அதிசயம், ஆசீர்வாதம் இந்த நூற்றாண்டின்... அல்ல, இந்த ஆயிரம் ஆண்டின் (மிலேனியத்தின்) ஒரு கொடை. இனி, மறுபடியும் இப்படியான நாட்களை அடுத்த ஆயிரங்களில் (3000) தான் சந்திக்க முடியும்... எனவே இன்று உயிரோடு இருக்கும் ஒரு மனிதானால் அந்த நாட்களை சந்திக்க முடியுமா என்பது சாத்தியமே இல்லாத ஒரு சந்தேகம் தான்.
அப்படி என்ன தான் நாம் இந்த ஆயிரங்களில் கண்டோம்...
வேறு ஒன்றும் இல்லை, வெறும் தொடர் இலக்கங்களிலான திகதிகள் தான்!
நாள் தோறும் நாட்க்காட்டி கிழிக்கும் பழக்கம் இப்பொழுது நம்மிடையே மிகவும் அரிதாகி விட்டது. எனக்கு தெரிந்து முன்னர் என் சிறு வயதுப்பராயம் முதல் "மெய்கண்டான்" என்ற பெயருடைய ஒரு நாட்க்காட்டி இருந்தது... அது சுவரில் தொங்காத வீடுகளையே அந்நாளில் நான் யாழ்ப்பாணத்தில் கண்டதில்லை. இந்த நாட்காட்டியில் ஆங்கில திகதி, தமிழ் திகதி மட்டுமல்லாது, ராகு, சுப, குளி, எமகண்ட நேரங்களும், சூரிய உதய, அஸ்த்தமன நேரங்களும் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் மேலதிகமாக ஒரு திருக்குறளும் அதன் விளக்கமும் கூட குறிப்பிடப்பட்டிருக்கும். தவிர, அன்றைய தினத்தில் யாராவது முக்கியமான / உலகபிரசித்தி பெற்ற ஒருவரின் பிறந்த தினமாகவோ நினைவு தினமாகவோ இருந்தால் அதுவும், கோவில்களின் திருவிழா விபரமும் கூட குறிப்பிட்டிருப்பார்கள். ஒரு 5"X4" அளவு காகிதத்தில் இவ்வளவு விடையமும் அடங்கப்பெற்றிருக்கும்.
இன்னுமொரு கொஞ்சம் சுவாரிசயமான விடயம் என்றால், நாம் பாடசாலை விடுமுறைக்கு வன்னி பிரதேசத்தில் உள்ள என் பெரிய தந்தை ஒருவரின் வீட்டில் போய் தங்குவது வழக்கம். அங்கேயும் கூட இந்த நாட்க்காட்டி தொங்கும். ஆனால் அநேகர் வீடுகளில் இல்லை. நிச்சயமாக "சந்திரத்தார்" (எனது பெரிய தந்தையின் பெயர் சந்திரன்) வீட்டில் இருக்கும்.
ஊரில் ஏதாவது சுபகாரியம் என்றால், நிச்சயமாக ஐயரிடம் போகமுன்பதாய் "சந்திரத்தார்" வீட்டுக்கு வரும் ஒரு கூட்டம் அந்த "புலிமச்சி நாதர் குளம்" கிராமத்தில இருந்தார்கள். காரணம் `அங்க போனா "மெய்கண்டான் காலண்டரில" சுப நேரம் பாக்கலாம்` என்பது தான்.
இன்றளவும் அதே "புலிமச்சி நாதர் குளத்தில்" "சந்திரத்தார்" வீட்டில் "மேய்கண்டானுக்கு" என்று ஆணி அடித்த ஒரு கப்பு (வீட்டின் கூரையை தாங்கும் மரத்தூண்) இருக்கத்தான் செய்கிறது. காலைக்கடன்களை முடிப்பது போல, கடவுளைக்கும்பிடுவது போல.. இந்த காலண்டரில ஒரு கிழி கிழிக்காட்டி அந்த மனுஷனுக்கு பத்தியப்படாது.
ஆனால், இன்று நாம் நாளும் திகதியும் பார்ப்பது கையடக்க தொலை பேசியிலும் கணணிகளிலும் தான்.
எம்மில் எத்தனை பேர் இந்த திகதிகளை கண்ணுற்றோம்? கவனித்தோம்? கையெழுத்திடும்போது தன்னும் "அட இப்படி ஒரு வித்தியாசமான திகதியா?" என்று அதிசயிக்கவாவது செய்தோமா?
நான் கவனித்ததும் தேடிப்பிடித்ததுமான சில விடயங்களை இங்கே பதிகிறேன்... இவை, இந்த திகதிக்களும், இவற்றில் வாழ்ந்து கொண்டிருந்த நாமும் கொஞ்சம் விசேஷித்தவர்கள் தான் என்பதற்கு ஆதாரம்....
01-02-(20)03
11-12-(20)13
இவை தவிர நாம்...
01-01-01
02-02-02
03-03-03
04-04-04
05-05-05
06-06-06
07-07-07
08-08-08
09-09-09
10-10-10
11-11-11
12-12-12
ஆகிய திகதிகளையும் கடந்து வந்துள்ளோமே....
- தமிழ் -

Space Shuttle Columbia எனப் பெயரிடப்பட்டு விண்ணுக்கு ஏவப்பட்ட நாசா
அமைபின் விண்கலம் தன் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் வழியில்
பூமிக்கு மிகவும் அண்மையில் வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த
பேரும் மரணமடைந்தனர். சுக்கு நூறாக சிதறிய விண்கலத்தின் பாரிய
துண்டுகள் புவியின் பல இடங்களில் விழுந்த போதும் அதனால் யாருக்கும்
எந்த உயிர்ச் சேதமோ பொருள்ச் சேதமோ ஏற்ப்படவில்லை.
02-03-(20)04
ஈராக்கில் "அசோவ்ரா" படுகொலை நடந்தேறியது, 170 பேர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
03-04-(20)05
02-04-2005 இறந்ததாக சொல்லப்பட்ட புனித பாப்பரசர் 2ம் பவுல் அடிகளாரின் இறப்பு வத்திக்கான் விடுதியால் உத்த்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் பாப்பரசராக இருந்த காலத்தில் திருச்சபையின் சில சட்ட திட்டங்களில் மாட்ட்ரங்கள் ஹோண்டு வந்ததாலும் எண்கணித முறைப்படி இவரது பெயரில் அல்லது பிறந்த திகதி கூட்டு இலக்கத்தில் (சரியாக ஞாபகம் இல்லை...) 666 வருவதால் "இவர் அந்தி கிறிஸ்துவாக இருக்கலாம்" என விமர்சிக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
04-05-(20)06
05-06-(20)07
State Union of Serbia and Montenegro என்ற ஆட்ச்சியிலிருந்து செர்பியா சுதந்திரம் பெற்றது. தவிர, ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1974ம் ஆண்டு 'சயனைட்' அருந்தி வீரமரணம் எய்திய சிவகுமாரனின் நினைவு நாளை "தமிழீழ மாணவர் எழுச்சி நாள்" என கொண்டாடி வந்த இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மாணவர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
06-07-(20)08
07-08-(20)09
08-09-(20)10
தமிழ் சினிமா உலகின் "சொல்லாத காதல்" நாயகன் 'முரளி' இவ்வுலகை நீத்தார்.
09-10-(20)11
ஸ்கை ஜம்ப் (விண்வெளி) வீரரான "பார்வேல் காரேலின்" என்ற ரஷ்யர் இவ்வுலகை நீத்தார்.
10-11-(20)12