இந்த தலைப்பை கண்டவுடன் "இவன்" ஏதோ "தன்னை" பற்றி எழுதி வாசிக்கிற எங்கட நேரத்தை வீணடிக்க போறான் எண்டு நினைச்சு வாசிக்காமலே விட்டுட்டு போறவங்க கூட இருக்கலாம். but சத்தியமா சொல்றன், இங்க "நான்" "என்னை" பற்றி மட்டும் எழுத வரவில்லை. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின், குறிப்பாக இன்றைய என்போன்ற இளைஞர் யுவதிகள் (நீ இளைஞனா..... என்று எங்கோ ஒரு குரல் கேட்டாலும்,) தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் பற்றி, ஏன்.... இதுவரை நானே கூட அதிகம் கவலைப்படாத ஒரு விடயம் பற்றி தான் இன்கே எழுதப் போகிறேன் !
இந்த தலைப்பையும் இந்த தலைப்பையிட்டு ஒரு இரவு முழுவதும் தூக்கம் தொலைத்து சிந்திக்க வைத்ததுமான பெருமை ஒரு பெண்ணை சாரும். அந்த தோழியின் முகநூல் "நிலை இடுகை" தான் என்னை இவ்வளவு சிந்திக்கவும் இந்த இடுகையை எழுதவும் வைத்தது.
சிந்தித்து பார்த்தால் உண்மையிலேயே "நான் யார்" என்ற இந்த கேள்வியை நமக்குள் நாமேயோ அல்லது நம்முடன் பழகும் யாரிடமோ வோ நம்மை அறியாமலோ அறிந்தோ பல முறை நிச்சயமாக கேட்டிருப்போம். உதாரணத்துக்கு... யாரவது எம்மிடம் வேறு ஒருவரிடம் ஏதாவது சொல்லும்படி சொல்லும் போது "நான் யார் அதை அவனுக்கு சொல்ல?" என்று சொல்லி இருப்போம். எதவது ஒரு சம்பவத்தை பார்க்கும்போது மனதின் ஒரு பக்கம் சொல்லும், "அங்க போய் எதவாது செய்" என்று... ஆனால் மற்ற பக்கம் "நான் யார் இதிலை தலை போட" எண்டு அசரீரி கேக்கும்.
ஆனால், உன்மையிலேயே "நான் யார்" என்று அறியும் பொருட்டோ அல்லது இந்த தோழி சொன்னது போல நம்மை இந்த உலகில் அடையாளப்படுத்தும் பொருட்டோ இந்த கேள்வியை நம்மிடம் நாம் என்றும் கேட்டிருக்கவே மாட்டோம் என்பதே உண்மை. அதை விட பெரிய உண்மை என்னவெனில் ஒரு நொடியிலோ நிமிடத்திலோ சில மணித்தியாலங்களிலோ அல்லது ஒரு நாளிலோ கூட நம்மால் இந்த வினாவுக்கான உண்மையான விடையை கண்டு பிடிக்க முடியாது!
"நான் யார்" "என்னுடைய தனிப்பட்ட அடையாளம் என்ன" என்ற வேறுபட்ட ஆனால் ஒன்றோடு ஒன்று சம்பந்த பட்ட இந்த இரண்டு வினாக்களுக்கும் ஒரே இரவில் விடை காண முயன்று தோற்றபோது நான் நான் கண்டு பிடித்த உண்மை என்னவெனில், நம் முன்னோர்கள் சொன்னது போல "மனித மனம் ஒரு குரங்கு" என்பது மட்டுமே.
தோழி சொன்னது போலவே, "நான் யார்" என்ற கேள்விக்கு....
என்றவற்றை தவிர இன்னும் சில விடைகளாக, படித்த படிப்பின் பட்டங்கள், செய்த தொழிலின் பதவி நிலைகள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் ஒட்டிகொன்டாலும்...
"என்னை அடையாளப்படுத்தும் தனித்துவம்" என்ன என்ற கேள்விக்கு நிச்சயமாக ஒரு தனித்துவமான பதிலை இந்த நிமிடம் வரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. காரணம் அந்த விடயத்தில் என் "மனம் ஒரு குரங்கு" ஆகவே இப்பொழுது வரை இருந்து வருகிறது. அதற்க்கு காரணம் காலத்தின் கோலங்களாக கூட இருக்கலாம்.
காலம் செய்த கோலங்களால் கல்வி கற்றலை விட்டு வெளியே வந்த நாள் முதல் ஒரு தனிப்பட்ட தொழிலில் என்னால் நிலைத்து நிற்க முடிந்தது இல்லை. கல்லூரி கல்வியை கடந்த பிறகு பட்டச்சான்றிதழ் தரத்திலான கணணி கல்வி ஒன்றை கற்ற போதும் எனது முதல் தொழில் ஒரு பாதுகாப்பு உத்தியோகமாகவே (security service) இருந்தது. அதன் பின்பு எதோ ஒரு தற்செயல் சந்தர்ப்பத்தில் புகைப்பட கலையகம் ஒன்றில் எடுப்பு வேலை, ஒரு நாள் வரைகலை (designing) பகுதியில் உள்ளவர் வேலைக்கு வராத முதலாளியும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவசரமாக வந்த ஒரு வேலையை முகாமையாளரிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி பெற்று செய்து கொடுக்க போய் அது முதலாளிக்கு தெரிந்ததும் வரைகலை பிரிவில் வேலை.. அங்கருந்து விலகவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்ட போது, வேறு ஒரு கலையகத்தில் அதே போன்ற ஒரு பிரிவுக்கு முகாமையாளராக சேர்ந்து கொண்டேன். நாட்டு சூழ்நிலை அங்கிருந்து வெளியேற வைத்தபோது வானொலி ஒன்றில் இரவு நேர அறிவிப்பாளர் வேலை கிடைத்தது, பின்பு தந்தையின் உந்துதலால் வெளி நாடு ஒன்றில் போய் வேலை தேடிய போது ஒரு புண்ணியவான் தனக்கு உதவியாளராக (assistant) சேர்த்துகொண்டார், அந்த நிறுவனத்தில் சேர்ந்து 15 நாட்களுக்கு பிறகுதான் நான் இணைக்கப்பட்டு இருப்பது நிதி (finance) பிரிவு என்பதே (பாடசாலை நாட்களிலேயே கணிதம் நமக்கு சுத்த சூன்யம்!) எனக்கு புரிந்தது... இதில் நான் உதவியாளர் என்றது என்ன தெரியுமா?... அந்த நிறுவனத்தின் சர்வதேச நிதி முகாமையாளருக்கு பிரத்யோக உதவியார் என்பதும் தெரிந்து கொண்டேன். எப்படியோ தட்டு தடுமாறி 2 வருடம் கழிந்ததும் ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில், அவசரமாக வேலை தேட, கிடைத்தது தொலைத்தொடர்புகள் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப்பிரிவு அணித்தலைவர் வேலை. அங்கிருந்து நாடு திரும்பியதும் அதிஷ்டவசமாக Airtel என்கிற புதிய தொலைதொடர்பு நிறுவனத்துக்கு ஆள் எடுத்து கொண்டு இருந்ததால் அதே வேலை கிடைத்தது! ஆனால் 3 வருட முடிவில் அதே நிறுவனத்தில் 6 வெவேறு பணிகளிலும் பதவிகளிலும் இருந்து விட்டேன். இருந்தும் எதிர்பார்த்த காலத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிட்டாததால் அங்கிருந்து விலகியபொழுது கிடைத்தது "சலனப்பட தொகுப்பாளர்" (Visual / Video Editor) வேலை. அந்த நிறுவனத்திலும் மேலாளர் பதவி வரை உயர்ந்தபொழுது ஐரோப்பிய பயணம் சரிவரவும் இங்க ஓடி வந்தாச்சு! இங்க இப்ப வேலை வெட்டி இல்லாமல் குந்தி இருக்கிறன்.
இப்படி பலதரப்பட்ட தொழில் நிலைகளில் எனது திறன் திண்டாசி இருந்ததால், இண்டைக்கு இந்த வினாவுக்கு சரியான "என்னுடைய தனிப்பட்ட அடையாளத்தை" என்னாலேயே கண்டுகொள்ள முடியாது உள்ளது. இப்படி என்னை போல பலர் தவிக்கலாம். நிச்சயம் தவித்துதான் ஆக வேண்டும். அப்பத்தான் இந்த வினாக்களுக்கான விடையை கண்டு பிடிக்க முடியும்.
இப்போதைக்கு நான் சிந்தித்து சிந்தித்து கண்டு கொண்டது "எந்த வேலையாக இருந்தாலும் என் திறனை முழுவதும் ஈடுபடுத்தி, (அது கொஞ்ச நாளாக இருந்தாலும் கூட) செயற்பட்டு அடுத்த நிலைக்கு விரைவாக முன்னேற முடியுமானது" தான் எனது தனித்துவம் என்று இப்போதைக்கு நான் நினைத்தாலும், குரங்கு மனம்... வேற ஏதும் இருக்குமோ என்று சொல்லத்தான் செய்கிறது!
அதை கண்டு பிடிக்க இன்னும் சில காலம் செல்லலாம்.. ஆனால் இந்த விடயத்தை கண்டு பிடிக்க முயல ஆரம்பித்துவிட்ட காரணத்தால் நிச்சயம் விரைவில் கண்டுபிடித்துவிடுவேன் எனும் நம்பிக்கை என் மனதில் வந்துவிட்டது.
இப்படி நீங்கள் அனைவரும் நிச்சயம் உங்கள் தனிப்பட்ட அடையாளத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டால் தான் அந்த அடையாளத்தை உலகுக்கு வெளிப்படுத்த முடியும்.
காந்தியால் முடியுமானால், பாரதியால் முடியுமானால், எங்கோ ஒரு காட்டு வனாந்தர பூமியில் ஒரு பழங்குடி இனத்தில் பிறந்த நெல்சனால் முடியுமானால், தன் இனத்தையே அழித்து, தன் அடையாளத்தை உலகுக்கு காட்டிய ஹிட்லருக்கும், மனித உடலங்களை உணவாக கொண்ட இடியமீனுக்கு முடியுமானால்....
கல்தோன்றி மண்தோன்றா காலத்து மொழி பேசுவதாய்,
கறுப்பினத்தோன்றல்களின் கருவான இராவணன் வம்சம் என்றும்,
எட்டுதிசையாவும் தொட்டு அரசான்ட சோழ வழி என்றும்
சொன்னாலும் சொல்லாவிடினும் செருக்கோடு வாழும் செந்தமிழன் உன்னால முடியாதா?
தமிழன் என்று சொல்லி தனியே தலை நிமிர்வதில் இல்லை, உன் தனித்தன்மையை உலகுக்கு காட்டி முழு உலகுக்கும் முன்னால் நிமிர்ந்து சொல், இது தான் தமிழனின் தனித்துவம் என்று...
,,,,


No comments:
Post a Comment